புது டெல்லி: யமுனை நதி சுத்திகரிப்பு திட்டம் குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- யமுனை நதி எங்கள் நம்பிக்கையின் சின்னம். ஆனால், டெல்லியை ஆட்சி செய்த முந்தைய அரசாங்கங்கள் யமுனையை புறக்கணித்தன.

அவர்கள் யமுனையை சுத்தம் செய்யவில்லை. ஆனால் முந்தைய முதல்வர் கெஜ்ரிவால் யமுனை நதி நீரைக் குடிப்பேன் என்று கூறினார். அதை அவர் நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, யமுனையை சுத்தம் செய்ய நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.