இன்ஃபோசிஸின் மிகப்பெரிய அலுவலகம் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ளது. இங்குதான் இன்ஃபோசிஸ் நிறுவனங்களில் சேரும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் வளாகம் மைசூரு அருகே வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை இன்ஃபோசிஸ் வளாகத்திற்குள் சிறுத்தைப்புலி புகுந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்து, ஊழியர்கள் யாரும் உள்ளே செல்லக்கூடாது என உத்தரவிட்டனர். மேலும், அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இன்போசிஸ் வளாகத்துக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்கும் பணியில் 50 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு இடங்களில் கூண்டுகள் அமைத்து சிறுத்தையை பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆளில்லா விமானங்கள் மூலம் சிறுத்தை எங்கு நடமாடுகிறது என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. 370 ஏக்கர் பரப்பளவில் உள்ள இன்ஃபோசிஸ் மைசூரு வளாகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.