கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் தாஜ்பூர் பகுதியில் வன நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 கடைகள் சமீபத்தில் அகற்றப்பட்டன. இதற்கு கிழக்கு மிட்னாபூர் தொகுதி எம்எல்ஏவும், மாநில சிறைத்துறை அமைச்சருமான அகில் கிரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
கடந்த 3ம் தேதி தாஜ்பூர் பகுதிக்கு சென்ற அமைச்சர் கிரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்த வனத்துறை பெண் அதிகாரி மனிஷாவை அநாகரீகமாக மிரட்டினார்.
.“நீங்கள் ஒரு அரசு ஊழியர். அமைச்சரிடம் பேசும் போது தலை வணங்க வேண்டும். அடுத்த ஒரு வாரத்தில் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என் வழியில் வராதே. மீறினால் அடிப்பேன். ராத்திரி வீட்டுக்குப் போக முடியாது’’ என்று மிரட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக சாடின.
விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் அகில் கிரியை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமை உத்தரவிட்டது. இதன்படி நேற்று அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து திரிணாமுல் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், “முதல்வர் மம்தா அறிவுறுத்தலின்படி அமைச்சர் கிரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். சிறைத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.