முன்னாள் மத்திய நிதிச் செயலாளர் துஹின் காந்தா பாண்டே, இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 1987 ஆம் ஆண்டு ஒடிசாவில் ஐஏஎஸ் அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய துஹின், கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவின் நிதிச் செயலாளராகப் பணியாற்றினார்.
அதன் பிறகு, நிதி அமைச்சகத்தில் வருவாய் செயலாளராகவும் மாற்றப்பட்டார். துஹின் பாண்டே ஒடிசாவில் வணிக வரிகள், சுகாதாரம், பொது நிர்வாகம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.
அவரது திறமையான பணி மற்றும் அனுபவம்தான் அவர் செபி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்குக் காரணம். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். செபி தலைவராக பதவி வகிக்கும் மாதபி பூரி புச்சின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், துஹின் காந்தா பாண்டே பொறுப்பேற்பார்.