புதுடெல்லி: இந்தியாவில் UPI சேவைகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 2019 மற்றும் ஆகஸ்ட் 2024-க்கு இடையில் UPI பரிவர்த்தனைகள் ஆண்டு விகிதத்தில் 75% வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், UPI பயனர்களுக்கு கடந்த 1-ம் தேதி முதல் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, யுபிஐ லைட்டில் ஆட்டோ டாப் அப் என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, இந்த வசதி UPI லைட் பயனர்களுக்கு கிடைக்கும்.
பயனர்கள் UPI லைட்டில் ஒரு குறிப்பிட்ட அளவு குறைந்தபட்ச இருப்பை வைத்திருக்க முடியும். பேலன்ஸ் குறையும் போது, யூபிஐ லைட்டில் பேலன்ஸ் தானாகவே சேர்க்கப்படும். UPI லைட் பயனர்கள் பின்னை வழங்காமல் ரூ.500-க்கு உள் பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.
மேலும் UPI லைட்டில் அதிகபட்சமாக 2000 ரூபாய் இருப்பு வைத்திருக்கலாம். UPI லைட் பரிவர்த்தனை வரம்பு ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக, பயனர்கள் இப்போது தங்கள் UPI லைட் வாலட்டை ரூ. 5,000 இருப்பு வைக்கலாம். முந்தைய வரம்பு ரூ.2,000. UPI லைட்டின் தினசரி செலவு வரம்பு ரூ.4,000 ஆக உள்ளது.