மும்பை: பாடகர் உதித் நாராயணன் விதிகளை மீறி பெண் ரசிகர்களின் உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ‘ரன்’ படத்தில் ‘காதல் பிசாசே’ பாடலை உதித் நாராயணன் பாடினார். தமிழில் பல பாடல்கள் பாடியுள்ளார். ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 2,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள உதித் நாராயணனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சில வருடங்களாக பின்னணிப் பாடகராக இருந்ததோடு மட்டுமல்லாமல், நேரடி நிகழ்ச்சிகளிலும் தனது வெற்றிப் படப் பாடல்களைப் பாடி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த லைவ் ஷோ ஒன்றில் உதித் நாராயணன் பாடிக்கொண்டே செல்ஃபி எடுக்க ரசிகர்கள் பலர் போட்டி போட்டனர். அப்போது பெண் ரசிகர்களுடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தது மட்டுமின்றி செல்ஃபி எடுத்த பிறகு உதித் நாராயணன் தலையைத் திருப்பி ரசிகரின் உதட்டில் முத்தமிடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதேபோல் மேலும் சில பெண்களையும் முத்தமிட்டுள்ளார். உதித் நாராயணனின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.