ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் சட்டப் பேரவைத் தலைவராக உமர் அப்துல்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு – காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராகப் பதவியேற்பார் என்று அக்கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவித்தார். இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பரூக் அப்துல்லா, “கட்சியின் சட்டப் பேரவைத் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று நடந்தது. தேசிய மாநாட்டுக் கட்சி சட்டப்பேரவைத் தலைவராக உமர் அப்துல்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்,” என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உமர் அப்துல்லா, “என்னை நம்பி கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்த கட்சி உறுப்பினர்களுக்கு எனது இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி கூறுகிறேன். அரசிடம் உரிமை கோர எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. காங்கிரஸிடம் இருந்து ஆதரவு கடிதம் கிடைத்ததும், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவேன்,” என்றார். இந்நிலையில், உமர் அப்துல்லாவுக்கு 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.