புதுடெல்லி: சமூக வலைதளங்களில் ஆபாசமான பதிவுகள் அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் மற்றும் OTT தளங்களில் ஆபாசமான மற்றும் தவறான பதிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு கடுமையான சட்டங்கள் தேவை என்றும் அவர் மக்களவையில் தெரிவித்தார்.
அவரது உரையில், சமூக ஊடகங்கள் ஆரம்பத்தில் பத்திரிகை சுதந்திரத்திற்கான முக்கிய கருவியாக இருந்தபோதிலும், அது இப்போது கட்டுப்பாடற்ற வெளிப்பாட்டின் இடமாக மாறியுள்ளது. இதில், ஆபாச காட்சிகளும், கருத்துகளும் அடிக்கடி பரப்பப்படுகின்றன. இதைத் தடுக்க தேவையான சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த பிரச்சினைகள் விவாதிக்கப்படுகின்றன என்றும் அவற்றைக் கையாள கடுமையான சட்டங்களும் பொதுப் பொறுப்பும் அவசியம் என்றும் அவர் பலமுறை வலியுறுத்தினார்.