புதுடெல்லி: மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் பிரச்சனைக்கு தீர்வு காணும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயலிழப்புகள் உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
இதன் காரணமாக ஊடகங்கள், தொழில்நுட்பம், வங்கி சேவைகள், மருத்துவ சேவைகள், விமான சேவைகள், ஆன்லைன் வர்த்தக சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரச்னையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள பல மைக்ரோசாப்ட் பயனர்கள் தங்கள் கணினிகளில் ‘புளூ ஸ்கிரீன் ஆஃப் டெத்’ பிழையை அனுபவித்து வருகின்றனர். அதாவது உங்கள் சாதனம் சிக்கலில் உள்ளது மற்றும் இயக்க முறைமையே செயலிழந்தது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் Crowdstrike புதுப்பிப்பில் மாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. பிரச்னை என்ன என்பதை கண்டறிந்துள்ளது; மென்பொருள் சிக்கலை தீர்க்க மைக்ரோசாப்ட் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. மத்திய அரசின் தொலைத்தொடர்பு அமைப்புகள் பாதிக்கப்படவில்லை. “எந்த பாதிப்பும் இல்லை. ரயில்வே சேவைகளிலும், “என்று அவர் கூறினார்.