டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று கூறும் போலியான கருத்துக்கணிப்பு பற்றி ஒரு செய்தி வைரலாகி வந்தது.
டெல்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் கடந்த 2 முறை ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது. இதனை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி கடந்த சில மாதங்களாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என ஏபிபி டிவியின் கருத்துக்கணிப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 70 இடங்கள் கொண்ட டெல்லி சட்டசபையில் பாஜக 49 இடங்களிலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 16 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தொடர்புடைய புகைப்படம் காட்டுகிறது.
மேலும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு புகைப்படத்தை பல நெட்டிசன்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வரவிருக்கும் டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கூறி வருகின்றனர்
இதை தெளிவுபடுத்த, The Quint நடத்திய சரிபார்ப்பு மூலம் அது போலியானது எனவும், ABP News இத்தகைய கருத்துக்கணிப்புகளை வெளியிடவில்லை எனவும் உறுதியாகப்பட்டது.