சென்னை: செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் 3 நாள்கள் சிறப்பு மேளா நடக்கிறது.
10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக போஸ்ட் ஆபீசில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு அதிகபட்சமாக 8.2% வட்டி அளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் சேருவதற்காக பிப். 21, 28, மார்ச் 10 ஆகிய 3 நாள்கள் சிறப்பு மேளா சென்னை, அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், தி.மலை மாவட்ட தபால் ஆபீஸ்களில் நடைபெறவுள்ளது.
செல்வமகள் திட்டம்.. பெண் குழந்தைகளுக்கு வரபிரசாதம். இத்திட்டம், 2015இல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர், பாதுகாவலர் சேமிப்பு கணக்கைத் தொடங்கி ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
ஆண்டுக்கு 8.2% வட்டி, வருமான வரியில் இருந்து விலக்கு உண்டு, 18 வயதானதும் 50% தொகையை எடுக்கலாம். திருமணத்திற்கு முன் கணக்கை முடிக்கலாம்.