குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா குறித்து மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:- நாட்டின் பாதுகாப்பிற்கும், வெளிநாட்டினரின் நுழைவைக் கண்காணிப்பதற்கும் கடுமையான குடியுரிமைச் சட்டங்கள் அவசியம். வங்கதேச ஊடுருவல்காரர்கள் மற்றும் ரோஹிங்கியாக்கள் மீது மேற்கு வங்க அரசு கருணை காட்டி வருகிறது. வங்கதேச எல்லையில் 450 கி.மீட்டர் தூரத்துக்கு வேலி அமைக்க மேற்கு வங்க அரசு நிலம் வழங்காததால் பணிகள் நிலுவையில் உள்ளன.

வேலி அமைக்கும் பணி நடக்கும்போதெல்லாம், ஆளுங்கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டு, மதவாத முழக்கங்களை எழுப்புகின்றனர். மேற்கு வங்க அரசு சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அடையாள ஆவணங்களை வழங்குகிறது. ஆதார் அடையாள அட்டை பெற்று, வாக்காளர் அடையாள அட்டையுடன் டெல்லி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அனைத்து வங்கதேசத்தவர்களும் மேற்கு வங்கத்தின் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் இருந்து ஆதார் அட்டைகளைப் பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் போது இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார் அமித் ஷா.