காக்கிநாடா: ஆந்திராவில் சுமார் 4 லட்சம் பண்ணை கோழிகளுக்கு மர்ம நோய் பரவியுள்ளது. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவின் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் தற்போது பண்ணைக் கோழிகளுக்கு மர்ம நோய் பரவி வருகிறது. இதுவரை சுமார் 4 லட்சம் கோழிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கால்நடை துறை அதிகாரிகள் கோழிப்பண்ணைகளில் ஆய்வு நடத்தி கோழிகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து விஜயவாடா, போபால் போன்ற இடங்களில் உள்ள பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆந்திர மாநில கால்நடை துறை இயக்குனர் டாக்டர் தாமோதர் நாயுடு கூறுகையில், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இறந்த கோழிகள் மற்றும் அவற்றின் உடல் உறுப்புகளை வெளிப்படையாக சில இடங்களில் கொட்டும்போது இதுபோன்ற வைரஸ் ஏற்படுகிறது. பண்ணை உரிமையாளர்கள் மற்றும் கோழி வியாபாரிகளின் அலட்சியமே இதுபோன்ற வைரஸ்களுக்கு காரணம்.