பெங்களூரு: லோக்சபா தேர்தலுக்காக, ‘பாரத் ரைஸ்’ துவக்கப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு அதை நிறுத்தி விட்டோம் என்று முதல்வர் சித்தராமையா கூறினார்.
பெங்களூரு விதான் சவுதாவில் மறைந்த முன்னாள் துணைப் பிரதமர் ஜெகஜீவன் ராம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் சித்தராமையா மாலை அணிவித்தார்.
அப்போது, அவர் அளித்த பேட்டி: கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு கொண்டு வந்த ‘அன்ன பாக்யா’ திட்டத்தை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டது. மாநில அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், லோக்சபா தேர்தலின் போது, ’பாரத் ரைஸ்’ அறிமுகப்படுத்தப்பட்டது.
தேர்தலுக்குப் பிறகு அதை நிறுத்திவிட்டார்கள். அரிசி கையிருப்பில் இருந்தும், எங்களுக்கு கொடுக்கவில்லை. ஜெகஜீவன்ராம் விட்டுச் சென்ற பாதையில் நடப்போம். பசுமைப் புரட்சியின் முன்னோடி அவர். சுதந்திரத்துக்குப் பிறகு உணவுத் துறை அமைச்சராகப் பதவியேற்று நாட்டிற்கு உணவுப் பாதுகாப்பு அளித்தார். அவர் கூறியது இதுதான்.