பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து 137வது நாளாக எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாதம் இருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இந்த முறை அந்த முறையை மாற்றி பெட்ரோல், டீசல் தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறையை பாஜக அரசு அமல்படுத்தியது. அதை நிர்ணயிக்கும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து பெட்ரோல், டீசல் தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இந்நிலையில், கடந்த 136 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 137வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மீதான வரி குறைக்கப்பட்ட பிறகு பெட்ரோல், டீசல் விலை குறையுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.