கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா தொடர்பாக விமர்சனத்துடன் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்த பின்னர் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து அவர் லிபரல் கட்சி தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.
இந்த நிலையில், பாஜக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், கடந்த 10 ஆண்டுகளில் உலகின் முக்கிய நாடுகளின் தலைமைச் சேவையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டபோதும், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் நிலையான, வலிமையான பிரதமராக திகழ்கிறார் என கூறப்பட்டுள்ளது. மோடியை “அல்டிமேட் பிக்பாஸ்” என சித்தரிக்கும் விளக்கப்படமும் பகிரப்பட்டது.
பாஜக பதிவில், 2014 முதல் இங்கிலாந்தில் 6 பிரதமர்கள், ஆஸ்திரேலியாவில் 4 பிரதமர்கள், அமெரிக்காவில் 3 ஜனாதிபதிகள், ஜப்பானில் 4 பிரதமர்கள், கனடாவில் 2 பிரதமர்கள் மாறியதாகவும், மோடியே இந்த காலகட்டத்தில் தொடர்ந்து பதவியில் உள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மோடியின் தலைமையை வலியுறுத்தும் பாஜக பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.