உத்தரப் பிரதேசத்தில் தளவாடத் துறையை மேம்படுத்த போக்குவரத்து நெரிசல், பார்க்கிங் பிரச்னைகள், சரக்குகள் செல்வதில் உள்ள இடையூறுகள் நீக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் சீரான விநியோகத்திற்கான முறையான உள்கட்டமைப்பை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டம், சரக்குகளின் பாதுகாப்பான போக்குவரத்து, வாகன நிறுத்துமிட வசதி, ஓய்வு இடங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிப்பு ஆகியவற்றை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாநில தளவாடத் திட்டத்தைச் செயல்படுத்தவும், அதன் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தவும் ஒரு தளவாடப் பிரிவை உருவாக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.