பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் இரண்டு இளம் பெண்கள் ருத்ராட்ச மணிகளை விற்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. லியோனார்டோ டா வின்சியின் மோனாலிசா உலகின் மிகவும் பிரபலமான ஓவியங்களில் ஒன்றாகும். இந்த ஓவியத்தின் அடிப்படையில் அழகான இளம் பெண்களை மோனாலிசா என்று அழைப்பது வழக்கம். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தற்போது ருத்ராட்ச மணிகளை விற்கும் இரண்டு இளம் பெண்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.
அவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர்கள். குடும்ப வறுமை காரணமாக பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு ருத்ராட்ச மணிகள் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உண்மையான பெயர்கள் தெரியவில்லை என்றாலும், இருவரும் மஹா கும்பமேளாவின் மோனாலிசாக்கள் என்று விவரிக்கப்படுகிறார்கள். பெண் ஒருவர் கூறுகையில், “தினமும் ரூ.3000-க்கு ருத்ராட்ச மணிகளை விற்கிறேன்.
என்னிடம் ரூ.50,000 மதிப்புள்ள மணிகள் உள்ளன. அவை அனைத்தையும் மகா கும்பமேளாவில் விற்க திட்டமிட்டுள்ளேன். இதன் மூலம் எனக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். மற்றொரு இளம் பெண் பாதுகாப்பு கருதி பிரயாக்ராஜில் இருந்து தனது சொந்த ஊரான இந்தூருக்கு திரும்பியுள்ளார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், “எங்கள் வீட்டு வேலைக்காரி திடீரென சமூக வலைதளங்களில் பிரபலமானார். மஹா கும்பமேளாவில் தினமும் அவளைத் தேடி பலர் வருகிறார்கள்.
அவளது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அவளை வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். எங்கள் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மணிகளை விற்கிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷா என்ற பெண் துறவியும் சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறார். மாடல் அழகி தற்போது நிரஞ்சனி அகடா ஆசிரமத்தில் சேர்ந்து துறவியாகியுள்ளார். இதுபற்றி ஹர்ஷா கூறும்போது, “கடந்த 2 வருடங்களாக மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்தேன். அதில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை. இப்போது மன அமைதிக்காக ஆன்மிகத்தில் ஈடுபட்டு வருகிறேன்” என்றார்.