முடியை வலிமையாக்கவும், பளபளப்பை அதிகரிக்கவும் பல ஆண்டுகளாக நம்பிக்கையான ஆயிலாக தேங்காய் எண்ணெய் இருந்து வருகிறது. இதனுடன் சக்திவாய்ந்த சில இயற்கை பொருட்களைச் சேர்த்து பயன்படுத்தினால், முடி உதிர்தல், பொடுகு, முடி மெலிதல், முன்கூட்டியே முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு பயனுள்ள தீர்வாக அமையும்.

1. வெங்காய சாறு
சல்ஃபர் நிறைந்த வெங்காய சாறு கொலாஜன் அளவை அதிகரித்து ஹேர் ஃபாலிக்கில்ஸை தூண்டுகிறது. இது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் ஆன்டிபாக்டீரியல் பண்பு காரணமாக தொற்றுகளைத் தடுக்கிறது.
2. கறிவேப்பிலை
பீட்டா கரோட்டின் மற்றும் அமினோ ஆசிட்ஸ் நிறைந்த கறிவேப்பிலை, கூந்தல் ஆரோக்கியத்திற்கு அதிசயங்கள் செய்யும். இது முடி வேர்களை வலுப்படுத்தி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முடி மெலிதல், உதிர்தல் மற்றும் முன்கூட்டியே நரைத்தலைத் தடுக்கும்.
3. வெந்தயம்
வெந்தய விதைகளில் புரதம், இரும்பு மற்றும் நிகோடினிக் ஆசிட் உள்ளது. தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தினால், பொடுகை குறைத்து வேர்களை வலுவாக்கும். இதனால் முடி எளிதில் உடையாமல் அடர்த்தியாக வளரும்.
4. கற்றாழை
குளிர்ச்சி மற்றும் ஈரப்பதம் தரும் கற்றாழை, தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கும்போது பொடுகு, அரிப்பு மற்றும் உச்சந்தலை எரிச்சலை குறைக்கிறது. கூந்தலை புத்துணர்ச்சியுடனும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்கிறது.
5. விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயில் உள்ள ரிசினோலிக் ஆசிட் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. பாக்டீரியா மற்றும் அழற்சியை குறைத்து அடர்த்தியான கூந்தலை உருவாக்குகிறது.
6. செம்பருத்தி
வைட்டமின் A மற்றும் C நிறைந்த செம்பருத்தி பூக்கள் கூந்தல் வளர்ச்சியை தூண்டும். தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தினால், முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கும், முடி உதிர்தலைக் குறைக்கும்.