சென்னை: இளம் வயதிலேயே சிலருக்கு தலை நரைத்து போய்விடுகிறது. சத்து குறைப்பாடு, ஜீன் போன்ற பல காரணங்கள் கூறப்படுகிறது. இப்படி தலை நரைத்து போய் வயதான தோற்றம் ஏற்படுவதால் பலரும் வேதனைப்படுகின்றனர்.
இந்த நரை பிரச்னைக்கு இயற்கை முறையிலான தீர்வு பற்றி தெரிந:த கொள்ளுங்கள். புங்க எண்ணெய் 250 மில்லி, கரிசலாங் கண்ணிச் சாறு 250 மில்லி, தேங்காய் எண்ணெய் 500 மில்லி ஆகியவை சேகரித்து வைத்துக் கொண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து சிறிது சிறிதாக வில்லை தட்டி நிழலில் உலர்த்தவேண்டும்.
வில்லைகள் உடையாத அளவு காய்ந்ததும் புங்க எண்ணெயில் பதினைந்து தினங்கள் ஊறப்போட்டு மொத்தம் ஒரு மாதம் சென்றபின் வடிகட்டி வைத்துக் கொணடு தேவைக்கு தகுந்தாற்போல் வாசனை கொடுக்க ஜாஸ்மின் ஆயில் கலந்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் தலைக்குத் தடவி வாருங்கள்.
இளமையில் ஏற்பட்ட நரை மாறி நல்ல கருப்பு நிறமாக வந்து விடும். இதனால் மனதில் ஏற்பட்ட கவலையும் நீங்கி விடும்.