திருமணம் என்பது வாழ்க்கையில் ஒருமுறை வரும் முக்கியமான நிகழ்வாகும். அந்த நாளை சிறப்பாக மாற்றும் வகையில் நகைகள் முக்கிய பங்காற்றுகின்றன. இப்போது திருமண பருவம் தொடங்கியிருப்பதால், தனிஷ்க் நிறுவனத்தின் ரிவா பிராண்டு, மணமகள்களுக்கான நகைகளில் சிறந்த தேர்வாக விளங்குகிறது. ரிவா, இந்தியாவின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் கைவினை நகைகளை வடிவமைத்து வழங்குகிறது.

இந்நகைகள் பாரம்பரியத்தின் அடையாளமாக இருந்து, நவீன மணமகளின் ரசனைக்கு ஏற்றவாறு அமைகின்றன. ஒவ்வொரு சமூகத்தின் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில், குந்தன், போல்கி, வைரம், பிளைன் தங்கம் போன்ற நகைகள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யலாம். இவை திருமண நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாமல், ஹல்தி, சங்கீத் போன்ற வழக்கமான குடும்ப நிகழ்வுகளுக்கும் ஏற்றவை.
ரிவா நகைகள் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கைவினை நுட்பங்களால் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு துண்டும் பாரம்பரியத்தையும் தனித்துவத்தையும் ஒரே நேரத்தில் கொண்டு வருகிறது. தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், ரிவா தங்க பரிமாற்ற திட்டத்தின் வாயிலாக, பழைய தங்கத்தை நல்ல விலையில் மாற்றி புதிய நகைகளை வாங்கும் வாய்ப்பையும் அளிக்கிறது.
மணமகளுக்கு தேவையான நகைகள் மட்டுமன்றி, திருமணத்திற்கு சேகரிக்கும் மற்ற ஆபரணங்களும் இந்த பரிமாற்ற திட்டத்தின் மூலம் பெறலாம். தரம், பாரம்பரியம் மற்றும் புதுமை ஆகியவற்றின் இணைப்பாக, ரிவா நகைகள் உலகளாவிய நகை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.