ஆண்டி-ஏஜிங் மற்றும் முகப்பரு சிகிச்சைகளில் பரவலாக பயன்படுத்தப்படும் ரெட்டினாய்டுகள், சருமத்தின் அமைப்பை மேம்படுத்தி சுருக்கங்கள், பிக்மென்டேஷன் போன்றவை குறைய உதவுகின்றன. இது பலருக்குத் தெரிந்த உண்மைதான். ஆனால் இவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு கூறை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் இல்லாதவர்கள் அதனை தவறாகப் பயன்படுத்தி, சரும எரிச்சல், வறட்சி மற்றும் அழற்சி போன்ற பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறார்கள். சிலர் வாரத்தில் தினசரி பயன்படுத்தினால் விரைவாக மாற்றம் தெரியும் என எண்ணி, அதனையே தவறாக பயன்படுத்துகிறார்கள். இது ஒரு நாளில் வேலை செய்யும் ஸ்பிரிண்ட் அல்ல, மாறாக, சீரான முறையில் பயன்படுத்தும் போது தான் நல்ல பலன் தரும் மாரத்தான் என்கிறார் தோல் நிபுணர் டாக்டர் ஸ்மிருதி நதானி.

அதிகமாக பயன்படுத்துவது மட்டுமல்லாமல், மாய்ஸ்சரைசர் இல்லாமல் ரெட்டினாய்டை பயன்படுத்துவது சரும தடையை பாதிக்கக்கூடும். தொடக்கத்திலேயே சருமம் வறண்டு எரிச்சல் ஏற்படும். இதற்கு ஒரு எளிய வழி, ரெட்டினாய்டுக்கு முன்னும் பின்பும் மாய்ஸ்சரைசரை தடவி சாண்ட்விச் முறை பின்பற்ற வேண்டும். இது ரெட்டினாய்டின் பலனை குறைக்காமல், அதனால் ஏற்படும் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும். இது மட்டுமின்றி, பலர் தினசரி சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறுக்கிறார்கள். ரெட்டினாய்டுகள் சருமத்தை சூரிய ஒளிக்குத் தீவிரமாக உணர்ச்சிப்படுத்துவதால், தினமும் SPF 30 அல்லது அதற்கு மேல் உள்ள சன்ஸ்கிரீனை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், அதிக பிக்மென்டேஷன் மற்றும் சரும சேதம் ஏற்படும்.
மேலும், பலர் வீக்கேஷனில் போல் எண்ணி வேறு வேறு ஆக்ட்டிவ் கூறுகளுடன் ரெட்டினாய்டை கலக்குகிறார்கள். உதாரணமாக வைட்டமின் சி, கிளைகோலிக் ஆசிட், சாலிசிலிக் ஆசிட் போன்றவற்றுடன் சேர்த்து பயன்படுத்தும் போது, அது ரெட்டினாய்டின் எதிர்வினைகளை அதிகரித்து, தோலில் தேவையற்ற அழற்சி மற்றும் பலவீனங்களை ஏற்படுத்தும். எனவே இரவில் ரெட்டினாய்டுகள் மற்றும் காலையில் வைட்டமின் சி போன்ற தயாரிப்புகளை ஒவ்வொரு முறையும் தனித்தனியாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம். தவிர, உங்கள் தோல் நிபுணரின் அனுமதி இல்லாமல் பல கூறுகளை ஒரே நேரத்தில் சேர்க்க வேண்டாம்.
மொத்தமாக, ரெட்டினாய்டுகள் சிறந்த பலன்களை தரக்கூடியவை என்றாலும், அதற்கு சரியான வழிகாட்டலோடு, பொறுமையோடு, தினசரி பின்பற்றும் நெறிமுறையோடு பயன்படுத்துவது மிகவும் முக்கியம். உங்கள் தோல் தனிப்பட்டது என்பதால், அதற்கான தேவைகள் நிபுணர் ஆலோசனையுடன் நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும். நீங்களும் ஒரு நிபுணரின் வழிகாட்டலுடன் இந்த சக்தி வாய்ந்த கூறை சரியாக பயன்படுத்தினால், உங்கள் சருமம் காலப்போக்கில் உண்மையில் மினுமினுக்கத் தொடங்கும்.