சென்னை: நாம் விரும்பி அருந்தும் காபி கூட முகப்பரு வருவதற்கு காரணமாக அமையலாம். சிலர் காபி பிரியராக இருப்பர். அப்படிபட்டவர்கள் அதிகமாக காபி குடிக்கும் போது முகப்பரு வரும் வாய்ப்புள்ளது. முகப்பரு வருவதற்கு காரணமாக இருப்பது ஹார்மோனின் சமநிலையற்ற தன்மை. ஆகவே தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் அருந்தும் காபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் காஃபியில் உள்ள வேதிப் பொருட்கள் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை தூண்டி விடுகிறது. அதுவே தேவை இல்லாத கலோரிகளை உடலில் அதிகரித்து முகப்பரு வர காரணமாகிறது.
அதுமட்டுமல்லாமல் அதிகமாக நாம் காபி அருந்தும் போது அது விரைவில் ஜீரணமாகி சிறுநீர் வழியாக வெளியேறும். அதாவது அதிக காபி குடிக்கும் போது நிறைய சிறுநீர் வெளியாகும்.
அதனால் நம் உடலில் உள்ள நீர்சத்து குறைந்து அமில அளவு அதிகமாகும். இதனால் உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் போகும் போது கூட முகப்பரு வர அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, காபி தானே என்று நமது விருப்பத்திற்கு அருந்தினால் தேவையற்ற முகப்பருக்கள் தானாகவே வந்துவிடும். ஆகவே அளவோடு காபி அருந்தினால் முகப்பரு இல்லாமல் பளபளப்போடு இளமையாக இருக்கலாம்.
தோல் ஆரோக்கியமாக இருக்க அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும். உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் போனாலும் சரும பிரச்சனைகள் ஏற்படும். அதிகமாக பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது நல்லது.