சென்னை: திருமண வைபவத்தின் போது நடக்கும் அனைத்து சடங்குகளுக்கு மிகவும் கவனமாகவும் நேர்த்தியாகவும் திட்டமிடுவோம். திருமணம் மட்டுமல்லாது அதற்கு முன் நடக்கும் நிகழ்ச்சிகளையும் சிறப்பாக நடத்த வேண்டும்.
ஆனால் பல பெண்கள் மெஹந்தி (மருதாணி) வைக்கும் சடங்கின் போது அவர்களின் ஆடைகளுக்கும் தோற்றத்திற்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். அதற்கு காரணம் இந்த நிகழ்வு அவர்களின் வீட்டில் நடப்பதால் மிகப்பெரிய நிகழ்ச்சியாக இது இருக்காது. இருப்பினும், மெஹந்தி சடங்கு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, அது உங்கள் வீட்டில் நெருங்கிய சொந்த பந்தங்களை மட்டும் அழைத்து நடத்தப்பட்டாலும் சரி, அது உங்களுக்கான விசேஷமான நாளாகும். அந்த தருணங்கள் அனைத்தும் புகைப்படங்களாக படம் பிடிக்கப்பட்டிருக்கும். அனைவரின் கண்களுக்கும் நீங்களே தெரிவீர்கள். அதனால் ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் பார்ப்பதற்கு சிறப்பாக தோன்ற வேண்டும். சரி இப்போது மெஹந்தி சடங்கின் போது தேவதையாக ஜொலிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
நாகரீகத்தின் அடிப்படையில் போக வேண்டுமானால் ஆரஞ்சு, மஞ்சள், பச்சை அல்லது இந்த நிறங்களின் கலவையே சிறந்த தேர்வாக இருக்கும். பளிச்சென இருக்கும் இந்த நிறங்கள் கண்டிப்பாக உங்களை தனியாக எடுத்துக் காட்டும். பளிச்சென இருக்கும் நிறங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வெளிரிய பழுப்பு, மிதமான பிங்க், மிதமான மஞ்சள் அல்லது நீலப் பச்சை நிறங்களை தேர்ந்தெடுக்கலாம். ஒருவருக்கொருவர் உங்கள் ஆடை நிறத்தை பார்த்து பாராட்டி கொள்ளும் அளவிற்கு நிறத்தை தேர்ந்தெடுங்கள். சொல்லப்போனால் கரை அல்லது துப்பட்டா அல்லது ஒட்டு மொத்த தோற்றத்தில் நிறங்களின் சேர்க்கை நன்றாக இருக்க வேண்டும்.
ஆடையை தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டிய உங்களின் வசதியை பற்றி தான். ஆனால் அதற்காக ஸ்டைலை மறந்து விடக்கூடாது. அனார்கலி அல்லது சல்வார் கமீஸ் அல்லது குர்தா தான் சிறந்த தேர்வாக இருக்கும். நீங்கள் மரபு சார்ந்த வழியில் ஆடை அணிய வேண்டும் என விருப்பப்பட்டால் சேலை, லெஹெங்கா அல்லது காக்ராவிற்கு மாற்றாக இவைகளை அணியலாம்.