சென்னை: பொடுகுத்தொல்லை மற்றும் உடல்சூடு காரணமாக முகப்பரு வரலாம். இதனை தவிர்க்க உங்களுக்கு சில யோசனைகள்.
திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவிவர முகப்பரு நீங்கும். 50 மில்லி நல்லெண்ணெயுடன் மிளகை ஊறவைக்க வேண்டும். இதை 20 நாட்கள் கழித்து முகப்பரு உள்ள இடங்களில் தடவி வர பருக்கள் நீங்கும்.
எலுமிச்சை சாறுடன் நீர் சேர்த்து பரு உள்ள இடங்களில் தடவி இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்துவர முகப்பருக்கள் நீங்கும்.
இலவங்கப்பட்டை பொடி அரை தேக்கரண்டியுடன் தேன் சேர்த்து ஒரு பேஸ்டை உருவாக்கவும். இதை முகப்பரு உள்ள இடத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிவர நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை ஜெல்லை முகப்பரு உள்ள இடங்களில் தடவிவரலாம். வெள்ளரி பிஞ்சை தக்காளி ஜூஸுடன் கலந்து முகத்தில் அப்ளை செய்துவர நல்ல நிவாரணம் கிடைக்கும். சந்தனத்துடன் சிறிது பன்னீர் சேர்த்து கலந்து முகத்தில் தடவிவர முகப்பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
மஞ்சள் மற்றும் தயிரை கலந்து முகத்தில் தடவிவர முகப்பருக்கள் நீங்கி முகம் பொலிவாகும்.