சென்னை: நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களை வைத்தே நமது சருமத்தை கண்ணாடிபோல் ஜொலிக்க வைக்கலாம்.
காய்ச்சாத பால் 3 டேபிள்ஸ்பூன் எடுத்து அதை ஐஸ்க்யூப் வைக்கும் ட்ரேயில் ஊற்றி உறையவைக்கவும். முகத்தை வெறும் தண்ணீரில் கழுவி அழுத்தாமல் துடைக்கவும். பிறகு உறையவைத்த பால் க்யூப்ஸ் கொண்டு முகத்தில் மெதுவாகத் தேய்க்கவும். சருமத்தின் சூட்டில் அது உருகிக் கரையும். முழுவதும் கரையும் வரை தேய்க்கவும்.
3 டேபிள்ஸ்பூன் இயற்கையான தேனில், மெலிதாக நறுக்கிய தக்காளித் துண்டுகளை முக்கி முகத்தில் தேய்க்கவும், இதனை15 நிமிடம் காயவிடவும் பிறகு வெறும் தண்ணீரில் கழுவவும்.
கெமிக்கலோ சேர்க்காத கற்றாழை ஜெல் கொண்டு முகத்தில் மசாஜ் செய்து கழுவவும். தக்காளி விழுது 2 டீஸ்பூன், தயிர் 1 டீஸ்பூன், எலுமிச்சைப் பழச்சாறு 10 துளிகள் மூன்றையும் குழைத்து முகத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்து கழுவவும்.
மேற்குறிப்பிட்ட இந்த முறைகளை வாரம் இரு முறை செய்தாலே முகம் கண்ணாடியாக ஜொலிக்கும்.