முகப்பரு என்பது ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனை. அதிகப்படியான எண்ணெய் சுரப்பால் துளைகள் அடைபடுவதால் பருக்கள் உருவாகின்றன. வயது, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை கூட காரணமாகும். பருக்கள் வந்துவிட்டால் முக அழகு கெடுவதோடு, மனஅழுத்தமும் அதிகரிக்கும். இதற்கு விலை உயர்ந்த க்ரீம்கள் தேவையில்லை, எளிய வீட்டு வைத்தியங்களே சிறந்த பலன் தரும்.

வேப்பிலை, சீரகம், கஸ்தூரி மஞ்சள், நெல்லிக்காய், சந்தனம், கடுக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் தடவலாம். மறுநாள் காலை கழுவினால் பருக்கள் குறையும். இதை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக செய்தால் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் தெளிவாக குறைந்து விடும்.
பச்சரிசியை ஊற வைத்து அரைத்து, அதிலிருந்து கிடைக்கும் மாவை முகத்தில் தடவி இரவு முழுவதும் விட்டு மறுநாள் கழுவுவது பருக்களை குறைக்கும். அதேபோல் கற்றாழை ஜெல் மற்றும் வேப்பிலை சேர்த்து முகத்தில் தடவினால் சருமம் சுத்தமாகி பருக்கள் மறையும். புதினா சாறு முகத்தில் தடவுவதும் அலர்ஜியை தணித்து பருக்களை நீக்கும் திறன் உடையது.
இவை அனைத்தும் இயற்கை வைத்திய முறைகள் என்பதால் எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் பாதுகாப்பாக பயன்படுத்தலாம். தொடர்ந்து சில நாட்கள் பயன்படுத்தினால் முகம் சுத்தமாக, பளிச்சென மாறும். பருக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கும், வந்த பருக்கள் மறையவும் இவை சிறந்த உதவியாக இருக்கும்.