சிறந்த முடி வளர்ச்சிக்காக வீட்டிலேயே எளிமையான ஹேர் பேக் தயாரிக்கலாம். இது இயற்கையானது மட்டுமின்றி, அதற்காக அதிக செலவும் தேவையில்லை. இதற்கு மூன்று செம்பருத்தி பூக்கள், ஐந்து செம்பருத்தி இலைகள், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், பத்து கறிவேப்பிலை இலைகள் ஆகியவை தேவையாகின்றன.
இந்த பொருட்களை மிக்ஸியில் நன்றாக அரைத்து பசை பதத்திற்கு கொண்டு வர வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த ஹேர்பேக்கை தலையில் நன்கு தேய்த்து, சுமார் 30 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.
வாரத்தில் இரண்டு முறை இந்த முறையை பின்பற்றினால், முடி வளர்ச்சி மேம்படும். மேலும், பொடுகு தொல்லையும், இளநரை பிரச்சனைகளும் குறையும். இந்த இயற்கை வழிமுறையால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது.
இயற்கை வைத்திய முறைகளை பயன்படுத்தும் முன், மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.