நமது தோலில் புரோட்டீன்கள் இருப்பதால், மேல்புற தோல் ஈரப்பதத்தை இழக்கும் போது அவை வறண்டு போக வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க தூங்குவதற்கு முன்பு வாஸ்லினை கொண்டு செய்ய வேண்டும். இதனை தொடந்து செய்து வந்தால் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து வறண்ட மேல்புற தோல்லை சரி செய்யும். சூரிய ஒளியால் உடலில் ஏற்படும் சிவந்த பகுதி, சிராய்ப்புகள் வராமல் தடுக்கவும் வாஸ்லின் பயன்படுகிறது.
கண்களில் போட்ட மேக்கப்பை சாதாரணமாக கழுவ கூடாது. அப்படி செய்வதால் சரும துளைகளில் அந்த மேக்கப் துகள்கள் அடைத்துக் கொண்டு சரும பாதிப்பை தரும். ஆகவே முகத்தை கழுவதற்கு முன் முகம் முழுக்க வாசலினை (vaseline) தடவுங்கள். எரிச்சலை தடுக்க உடனடியாக அந்த பகுதியை துடைத்துவிடுவது நல்லது. சிலருக்கு கூந்தல் வறண்டு காணப்படும். இதனால் முடியில் பிளவு ஏற்பட்டு அசிங்கமாக இருக்கும். அதனை சரி செய்ய சிறிய அளவு வாஸ்லினை எடுத்து தடவுங்கள்.
கால் பாத வெடிப்பை குணப்படுத்தவும், மென்மையான பாதங்களை பெறவும் வாஸ்லின் பயன்படுகிறது. தினமும் இரவில் படுக்கும் போது பாதம் முழுவதிலும் வாசிலினை தடவிவிட்டு அதன் மேல் சுத்தமான சாக்ஸை அணிந்து கொண்டு தூங்குங்கள். பெட்ரோலியம் ஜெல்லியில் உள்ள எண்ணெய் பாதத்தில் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைத்திருக்கும். உங்கள் கண் இமை ரோமங்களின் வேராக விளங்குவது உங்கள் கண் இமைகளே. வாஸ்லின் கொண்டு உங்கள் கண் இமைகளையும் சீரான முறையில் மசாஜ் செய்தால் இமை முடிக்கள் வளரும்.
தினமும் வாஸ்லின் ஜெல்லை முகத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இதனை செய்து வந்தால் முகப்பரு காரணமாக உருவாகும் வடுக்களும் மறைந்து விடும். வாஸ்லினுடன் சிறிதளவு சர்க்கரையை நன்றாக கலக்க வேண்டும். இதை சாதாரணமாக உதட்டின் மீது பூசுங்கள். அப்படியே லேசாக மசாஜ் செய்து துடைத்துவிடுங்கள்.
இதனால் உதடுகள் மென்மையாகும். நகங்களுக்கு வாஸ்லினை தடவி மசாஜ் செய்யவும் 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். தினமும் செய்தால் நகங்கள் உடையாமல் நன்றாக வளரும். நகங்களில் சொத்தை இருந்தால் அதன் பாதிப்பு குணமடையும்.