சென்னை: முகப்பரு பிரச்சினையை போக்கும் புதினா ஃபேஸ் பேக்கை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை: புதினா இலைகள் -10 முதல் 15, எலுமிச்சை சாறு – தேவைக்கு
செய்முறை: புதினா இலைகளை அரைத்து அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இது பேஸ்ட் போன்ற நிலைத்தன்மையை உண்டாக்கும். இதை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவிடவும். குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி எடுக்கவும்.
பேஸ்ட் அதிகமாக இருந்தால் பாட்டிலில் வைத்து சேமித்து 2 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். புதினா மற்றும் எலுமிச்சை சாறு வைட்டமின் சி நிறைந்தது. இதை முகத்தில் பயன்படுத்துவதால் முகத்துக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.
இதை பயன்படுத்துவதால் முகப்பருவை உண்டாக்கும் எண்ணெய் சுரப்பை குறைக்கிறது. பருக்களால் உண்டாகும் வீக்கத்தை சரி செய்கிறது.