சென்னை: வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும். கீழாநெல்லி இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு, அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.
நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்குகால் பலம் (9 கிராம்) பசும்பால் விட்டு அரைத்துகலக்கிக் காச்சி வடித்து தலை முழுகி வரலாம் இது கீழாநெல்லி தைலமாகும். இதனால் உச்சி குளிர்ந்து டென்ஷன் குறையும். அது மட்டும் அல்ல முடி நன்றாக வளரும்.
கீழா நெல்லி முழுத் தாவரத்தையும் பசுமையாக சேகரித்து நன்கு சுத்தம் செய்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சம் பழ அளவு கால் லிட்டர் வெண்ணெய் நீக்கிய மோருடன் கலந்து குடித்து வர மஞ்சள் காமாலை, நீரழிவு நோய் குணமாகும். பசுமையான கீழாநெல்லி தினமும் கிடைக்கப் பெறாதவர்கள் செடியை காய வைத்து தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு அரை டீஸ்பூன் அளவு தேவையான அளவு மோரில் கலக்கி உட் கொண்டு வரலாம்.கீழா நெல்லி வேரை அரைத்து பசும்பாலுடன் கலந்து, காலை, மாலை 3 நாட்கள் கொடுக்க உடல் சூடு குறைந்து குளிர்ச்சி பெறும். விஷக் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை விலக்குவதற்கான மருந்தாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.
ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை நசுக்கி, அதனை இரண்டு டம்ளர் நீரில் இட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை, மாலை இரு வேளைகளும் குடிக்க வெள்ளைபடுதல் தீரும்.வயிற்றுப் புண் குணமாக ஒரு கைப்பிடி அளவு கீழா நெல்லி இலையை அரைத்து, 1 டம்ளர் மோரில் கரைத்து காலையில் குடித்து வரவேண்டும். தேவையான அளவு கீழா நெல்லி இலைகளை அரைத்து காயத்தின் மீது வைத்துக் கட்ட காயங்கள் குணமாகும்.
கீழாநெல்லி இலையுடன் மாதுளம், நாவல் கொழுந்து இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் 1 டம்ளர் மோரில் கலக்கிக் குடித்து வர சீதபேதியை நிறுத்தும்.சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும். மேலும் செடியை நன்றாக மென்று ஈறுகளில் சாறு நன்றாகப் படிய வைத்திருந்தால். ஈறு நோய்கள் குணமாகும்.