சென்னை: அடிக்கடி சோப்பு போட்டு முகம் கழுவாதீர்கள்… ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரும் தனது முக தோற்றத்தை அழகாக வைத்துக்கொள்வதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை சோப்பினால் கழுவார்கள்.
ஆனால் அதில் ஒரு தீங்கு உள்ளது. அப்படி செய்வதால் சோப்பில் உள்ள கெமிக்கல் சருமத்தின் மீது வேறு விதமான பிரச்சனையை உண்டாக்கலாம். அதனால் முகத்தை வெறும் தண்ணீரில் மட்டும் கழுவுங்கள். சோப்பை போட்டு கழுவக்கூடாது
வேண்டுமென்றால் அதற்கு பதில் இன்னொரு முறை செய்யலாம். அவை என்னவென்றால் தக்காளி, முல்தானி மெட்டி தூள் ஆகியவை வைத்து சருமத்தை அழகுப்படுத்தலாம்.
தக்காளியை பேஸ்ட் போல் அரைத்து அதனுடன் 2 தேக்கரண்டி முல்தானி மெட்டி தூளை கலந்துக்கொள்ளவேண்டும். அதற்கு முன் சுத்தண்ணீரில் முகத்தை கழுவி துடைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் குழைத்த பேஸ்டை எடுத்து முகத்தில் மசாஜ் போல் செய்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவாகும்.