சென்னை: சரும பாதிப்பை தடுக்க என்ன செய்யலாம்.. எப்போது வெளியே சென்று திரும்பினாலும் கண்டிப்பாக சோப் போட்டு முகம், கை கால்களை நன்றாக கழுவ வேண்டும்.
இரவில் படுக்கப் போகும் முன் தரமான மாய்ஸ்ட்டுரைஸிங் க்ரீம், கோல்டு க்ரீம் ஆகியவற்றை முகத்தில் தடவவேண்டும். காலையில் வெளியே செல்லும் முன் சூரிய வெப்பம் தாக்காதிருக்க சன் டேன்லோஷன் தடவிக் கொள்ளவேண்டும்.
வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். புருவங்களை சீர்படுத்தி, மினி பேஷியல் செய்து முடியை சீராக வெட்டி வைத்துக் கொள்ள அதிகம் செலவாகாது.
நாம் வசிக்கும் இடத்தில் வெயிலும், நெரிசலும் அதிகமாக இருப்பதால் கிரீம் மேக்-அப்பை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது.
மேக்-அப் செய்வதற்கு முன் வியர்வை அதிகமாக உள்ளவர்கள் ஐஸ் கியூப்-ஐ முகத்தில் தேய்த்து அல்லது செய்த பிறகே மேக்-அப் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஐஸ் கியூப் கொடுக்காமல் மேக்கப் செய்து விட்டால் அவை சிறிது நேரத்துக்குப் பிறகு வியர்த்து விட்டால் சிவப்பு நிற புள்ளிகளாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.
இதை தவிர்க்க பவுடர் மேக்-அப் அதிகமாக உபயோகிக்க வேண்டும். அவரவர் நிறத்துக் கேற்றாற் போல் பவுடரை தேர்ந்து எடுக்க வேண்டும். இது மிக முக்கியமானதாகும். இதில் லிப்ஸ்டிக்கும் அடங்கும்.