நாம் சமைக்கும் உணவின் தரம், அதன் சுவை மற்றும் பாதுகாப்பு அனைத்தும் பாத்திரங்கள் மீது சார்ந்திருக்கின்றன. ஆனால் பெரும்பாலோர், பாத்திரங்கள் பழையதா, சேதமடைந்ததா என்ற கவனிப்பின்மை காரணமாக, தினசரி உபயோகத்தில் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படலாம். குறிப்பாக, நான்-ஸ்டிக், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், இரும்பு, அலுமினியம், மரம், பிளாஸ்டிக், பிரஷர் குக்கர் ஆகியவை ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட ஆயுட்காலம் இருக்கிறது.

நான்-ஸ்டிக் பேன்கள் மற்றும் தவாக்கள் 2–3 வருடங்களுக்கு மேல் நீடிக்கக் கூடாது. அதன் மேல்தட்டை கீறலடையும் பட்சத்தில் உடனே மாற்ற வேண்டும். உலோகத் துகள் உணவில் கலந்து, உடலுக்கே நச்சுத்தன்மை தரும் அபாயம் உள்ளது. இதேபோல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் 10–15 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். ஆனால், அடிபகுதி வளைந்து போவது, துருப்புகள் மற்றும் தீவிர கீறல்கள் தெரிந்தால் மாற்றம் அவசியம்.
அலுமினிய பாத்திரங்கள் 5–7 வருடங்கள் வரை மட்டுமே பாதுகாப்பாக பயன்படுத்த இயலும். அது மங்கலாகி, உணவில் உலோக சுவை இருந்தால் உடனடியாக கைவிட வேண்டும். இரும்பு பாத்திரங்கள் நீடிக்கும் ஆனால் தவறான பராமரிப்பு அல்லது அதிக துருப்பு ஏற்படும் பட்சத்தில் அதையும் மாற்றவேண்டும். சமைக்கும்போது உணவு ஒட்டத் தொடங்கினால் அது ஒரு எச்சரிக்கை.
பிரஷர் குக்கர் 5–8 ஆண்டுகள் பயன்படும். மூடியின் விசில் அல்லது கேஸ்கட் செயலிழந்தால் அல்லது உடலின் வடிவம் மாறினால், அந்த பாத்திரம் அபாயகரமாகிவிடும். மர ஸ்பூன்கள் மற்றும் சாப்பிங் போர்டுகளை 1–2 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றுவது அவசியம், ஏனெனில் கிருமிகள் எளிதில் பரவும். பிளாஸ்டிக் பாத்திரங்களில் BPA இல்லாமல் இருப்பது முக்கியம். விரிசல், உருகல் போன்றவை இருந்தால் உடனே மாற்ற வேண்டும்.
ஒவ்வொரு 6 மாதங்களுக்குமேல் உங்கள் சமையல் அறை பாத்திரங்களை சரிபார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் குடும்பத்தின் உணவுப் பாதுகாப்பையும் நீண்டகால ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும். பழைய பாத்திரங்களைத் தவிர்ப்பது பராமரிப்பு அல்ல; அது முன்னெச்சரிக்கையாகும்.