சென்னை: பொதுவாக குளிர் காலங்களை விட கோடை காலங்களில் அதிக சரும பிரச்சனை ஏற்படும். அதுவும் வெயிலில் பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் சரும பிரச்சனை ஏற்படும். இந்த சரும பிரச்சனையை சரி செய்ய எளிய வழி முறைகளை இந்த பதிவில் காண்போம்.
சரும பராமரிப்பு: பொதுவாக பெண்களுக்கு தங்களது முகத்தை மிக அழகாக வைத்திருக்க பிடிக்கும். அதனால் சிலர் பார்லர் சென்று பல ரூபாய் செலவழித்து முகத்தை அழகு படுத்திக் கொள்வார்கள். ஆனால் அவை எதுவுமே சிறிது காலத்திற்கு தான் இருக்கும். அதற்கு தான் பாட்டிமார்கள் தங்களுது சருமங்களை பாதுகாக்க பல இயற்கை மருத்துவத்தை கூறியிருக்கிறார்கள்.
அந்த வகையில், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சில ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். கீழே உள்ள குறிப்புகளை உங்கள் இயற்கையான அழகை மீட்டெடுங்கள்..
மஞ்சள் ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடியை 2 டீஸ்பூன் பாலில் சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவுங்கள் . பின்னர் 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரத்திற்கு இருமுறை இவ்வாறு செய்தால் உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்குகளை இது நன்றாக அகற்றி விடும்.
கடலை மாவு: கடலை மாவு ஒரு ஸ்பூன்,சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடுங்கள். இதை செய்வதன் மூலம் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி விடும்.
தக்காளி: தக்காளியை இரண்டாக நறுக்கி அதில் சர்க்கரையை தடவி முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதை செய்ய செய்ய உங்கள் முகம் புதுபொலிவுடன் பளபளப்பாக ஆகி விடும்.
மேற்கூறிய வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால் முகத்தில் ஏற்படும் அனைத்து சரும பிரச்சனைகள் நீங்கி முகம் பொலிவடைந்து விடும்.