தொடர்ந்து பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் தினமும் அணியும் வெள்ளை யூனிஃபாரம், ஒரு நாளே பளபளப்புடன் இருக்கிறது. அதற்கு அடுத்த நாளிலேயே, அது பழுப்பு நிறத்தில் கறைகள் படிந்த நிலையில் மாறியிருக்கும். கறைகளை அகற்ற பல முறைகள் முயற்சி செய்யும் பெற்றோர், பல நேரங்களில் இழக்கப்பட்ட பளபளப்பை மீட்டெடுக்க முடியாததால் சலிப்படைகின்றனர். இந்த நிலையை மாற்ற சில எளிய, ஆனால் பயனுள்ள வழிகளைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

வெள்ளைத் துணிகளை வண்ணத் துணிகளிலிருந்து தனியே துவைக்கும் பழக்கம் இருக்க வேண்டும். மேலும், பயன்படுத்தும் சோப்புப் பொருளில் சிறிதளவு ப்ளீச்சிங் ஏஜென்ட் இருக்க வேண்டும். இது துணிகளைச் சுத்தமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். துவைக்குமுன், கறை படிந்த பகுதியை சோப்பும் பேக்கிங் சோடாவும் கலந்து தேய்ப்பது நல்லது. துணிகளை வெயிலில் உலர வைப்பதும் முக்கியமாகும், அது துணிக்கு இயற்கை ஒளி ஒளிர்வை தரும்.
ஏற்கனவே கறைகள் நிலைத்திருக்கும் போது, எலுமிச்சை தோலை உலர்த்தி பொடி செய்து, அதில் சோப்புப் பொடியுடன் சேர்த்து தயாரிக்கப்படும் கலவையை பயன்படுத்தலாம். இந்த கலவையுடன் ஷேவிங் கிரீமைச் சேர்த்து நேரடியாக கறை உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து நன்கு தேய்க்கலாம். இந்த முறை பழுப்புக் கறைகளை கூட மிக எளிதாக அகற்றக்கூடியதாகும்.
மேலும், சமையலுக்கு பயன்படும் பேக்கிங் சோடாவை தக்காளி, மஞ்சள், டீ, காஃபி போன்ற கறைகளை அகற்ற பயன்படுத்து முடியும். பேக்கிங் சோடாவை சூடான நீரில் கலந்து, ஒரு பிரஷ் மூலம் துணியில் தேய்த்தால் சிறந்த விளைவு தரும். இதனுடன் கூடுதலாக ஆலாவை உபயோகிப்பதும் ஒரு எளிய வழியாகும், ஆனால் அதை நேரடியாகப் பயன்படுத்தாமல், தண்ணீரில் கலந்து மட்டுமே துணிக்கு ஊற வைக்க வேண்டும். இது துணிக்கு சேதம் ஏற்படாமல் கறைகளை நீக்க உதவும்.