சென்னை: பொதுவாகவே அணிகலன்கள் அணிந்து கொள்ளும்போது நம்முடைய தோற்றத்தில் ஒரு மாற்றம் உண்டாகும். அது மனதுக்கு மகிழ்ச்சியையும் ஜாலியாகவும் இருக்கும். ஆனால் மோதிரங்கள் அணியும் சருமத்தில் பச்சை நிறத்தழும்பு போன்று உண்டாவதைப் பார்த்திருப்பீர்கள். அது மகிழ்ச்சியான விஷயமெல்லாம் இல்லை. அது சாதாரண விஷயமாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது.
மோதிரங்கள் அணியும் போது சில சமயங்களில் மிகவும் மலிவாகக் கிடைக்கிற சில உலோகங்களால் ஆன அணிகலன்களை அணிகிறோம். அப்போது அதிலுள்ள ஆக்சிடைஸ் நம்முடைய சருமத்தில் கறைகளையும் புண்களையும் ஏற்படுத்தி விடும். அப்படி தழும்புகள் உண்டாகாமல் இருப்பதற்கும் பச்சை நிற கறைகள் ஏற்பட்டுவிட்டால் அதை எப்படி சரிசெய்யலாம் என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.
கிளியர் நெயில் பாலிஷ் மோதிரங்களில் உள்ள உலோகத்திலிருந்து வெளிப்படும் ஆக்சிடைஸ் தான் இந்த பச்சைநிற மாற்றத்துக்குக் காரணம். அதனால் கண்ணாடி போன்ற கிளியர் நெயில் பாலிஷை மோதிரத்தின் உட்பகுதியில் அப்ளை செய்து சிறிது நேரம் உலர விட்டு, பின் கைகளில அணிந்து கொள்ளுங்கள். இது பச்சை நிற கறை விரல்களில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். அதேசமயம் மோதிரம் சற்று கூடுதல் பளபளப்புடன் இருக்கும்.
கடைகளில் சருமங்களில் தழும்புகள் விழாமல் பாதுகாக்க ஸ்கின் கார்டு என்றே விற்கப்படுகிறது. அதை வாங்கி மோதிரங்கள் மற்றும் கொலுசு, அரைஞாண் கயிறு அணியும் இடங்களில் தடவிக் கொண்டு, அணிகலன்கள் அணிந்து கொள்ளலாம். இதில் உங்களுககு ஒரு கேள்வி வரலாம். இந்த ஸ்கின் கார்டு தினமும் அப்ளை செய்ய வேண்டுமா என்று நீங்கள் கேட்டலாம். அதற்கு அவசியம் இல்லை. ஒருமறை அப்ளை செய்தால், அது நம்முடைய சருமத்தை இரண்டு மாதங்கள் வரை சருமத்தில் பச்சை நிறம் தோன்றாமல் இருக்கும்.