பொதுவாக பருக்கள் நம் முகத்தை தவிர சில நேரங்களில் முதுகிலும் ஏற்படும், இது ‘Back Acne’ என்று அழைக்கப்படுகிறது. முதுகில் வரும் பருக்கள் வெளியே தெரியாது, கவலை கொள்ள தேவை இல்லை என்றாலும் நிறைய அசௌகரியங்களை ஏற்படுத்த கூடும். முதுகில் ஏற்படும் பருக்கள் பொதுவாக முக பருக்கள், ஒயிட்ஹெட்ஸ் அல்லது பிளாக்ஹெட்ஸை விட நீண்ட நாள் உடலில் இருக்கும். இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டால் முதுகில் அது இருக்கும் பகுதிகளில் எரிச்சல் ஏற்படவும் வாய்ப்புண்டு.
சில நேரங்களில் முகப்பருவை போலவே தான் முதுகில் ஏற்படும் பருக்களும் இருக்கும். உங்களின் முதுகு பகுதிகளில் பருக்கள் ஏற்பட்டிருந்தால் நிலைமையை சமாளிக்க பின்வரும் டிப்ஸ்களை பின்பற்றுங்கள். வியர்த்த பிறகு குளிக்கவும்: சருமத்தின் போர்ஸ்கள் (pores) அதாவது துளைகள் அடைபட்டிருப்பது மற்றும் பருக்கள் ஏற்பட வியர்வை முக்கிய காரணமாக இருக்கும். உடற்பயிற்சிக்கு பிறகு அல்லது வெப்பமான சூழலில் நீங்கள் இருக்கும் போது உடலில் இருந்து முற்றிலுமாக வியர்வை வெளியேறிய பிறகு குளிக்க நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஜென்டில் க்ளென்சிங்: உங்கள் சருமத்தில் பருக்கள் போன்ற பிரச்சனைகளால் நீங்கள் அவதிப்பட்டால் ஜென்டிலான, சாஃப்டான , கெமிக்கல் இல்லாத பாடி வாஷ் பயன்படுத்தவும். மேலும், கடுமையான ஸ்க்ரப்கள் அல்லது உங்கள் தோலை கடுமையாக அழுத்தம் கொடுத்து தேய்ப்பதை தவிர்க்கவும், ஏனெனில் இது சருமத்தை எரிச்சலடையச் செய்து ஏற்கனவே இருக்கும் பருக்கள் பிரச்சனையை அதிகப்படுத்தும். இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்கவும்: இறுக்கமான ஆடைகள், குறிப்பாக சிந்தடிக் பொருட்கள் சேர்க்கப்பட்ட ஆடைகள் வியர்வை மற்றும் பாக்டீரியாவை சருமத்திலேயே தங்க வைக்கலாம், இது பருக்கள், ரேஷஸ் போன்ற சரும பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
எனவே முதுகில் ஏற்ப்ஸ்ட்டும் பருக்களை சமாளிக்க முடிந்த போதெல்லாம் லூஸ் ஃபிட்டிங்குடன் கூடிய, காற்றோட்டமான துணிகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளுங்கள்.ஸ்பாட் ட்ரீட்மென்ட்ஸ்: கிரீம்ஸ் அல்லது பென்சாயில் பெராக்சைடு அல்லது சாலிசிலிக் ஆசிட் போன்ற ஜெல் கொண்ட மருந்துகளை சருமத்தில் ஏற்பட்டிருக்கும் பிரேக்அவுட்ஸ்களின் மீது நேரடியாக பயன்படுத்துங்கள். இவை சருமத்தில் ஏற்பட்டிருக்கும் அழற்சி மற்றும் வீக்கத்தை குறைக்கவும், பிரச்சனைகள் குணமாவதை துரிதப்படுத்தவும் உதவும்.
பருக்கள் உள்ள சருமத்திற்கு கூட ஹைட்ரேஷன் தேவை. பாதிக்கப்பட்ட சருமத்தை மாய்ஸ்ட்ரைஸ் செய்வது சருமம் வறண்டு போவதை தவிர்க்கவும், அழற்சியை குறைக்கவும் உதவுகிறது.கூடுதல் ஆயில் சேர்க்காமல் உங்கள் சருமத்தை ஹைட்ரேட்டாக வைத்திருக்க லைட்-வெயிட், ஆயில்-ஃப்ரீ மாய்ஸ்சரைசரை தேர்வு செய்து பயன்படுத்துங்கள். நம் சருமத்தில் எங்கு பருக்கள் அல்லது கட்டிகள் வந்தால் அதை கைகளால் கிள்ளவோ, அழுத்தவோ அல்லது நகத்தை வைத்து கீறவோ முயற்சி செய்யாதீர்கள். இப்படி செய்வது எண்ணெய் மற்றும் பாக்டீரியாவை உங்கள் தோலினுள் ஆழமாக எடுத்து சென்று தொற்று தீவிரமாக அதிக வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
மேலும் கைகளால் பருக்களை கிள்ளுவது வடுக்கள் மற்றும் புள்ளிகளை சருமத்தில் நிரந்தரமாக ஏற்படுத்தி விட கூடும். Tea Tree ஆயிலானது இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே இது பருக்களை எதிர்த்துப் போராடுவதற்கு பயனுள்ளதாக இருக்கும். இரவு தூங்க செல்லும் முன் இந்த ஆயிலை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு கரைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி அப்படியே விட்டு விடுங்கள்.