சென்னை: அழகாக இருக்கணும்… இன்றைய லேட்டஸ்ட் டிரெண்டுக்கு தகுந்தார்போல் இருக்கணும் என்று சில பெண்கள் ஆடைகளை கன்னாபின்னாவென்று அணிகின்றனர். ஆனால் ஆடை எப்படி இருக்கணும் தெரியுங்களா?
நடைமுறையில் இன்றைய பெண்கள் பேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் தங்களுக்கு ஏற்ற உடை, ஆபரணம், மற்றும் கலர் தெரிந்து கொள்வதில் சில ஆர்வமின்றி பேஷன் என்ற பெயரில் ஆடைகளை அலங்கோலமாக அணிகின்றனர். எப்படி ஆடை உடுத்தினால் நன்றாக இருக்கும். இதோ உங்களுக்காக!
உயரமாகவும், ஒல்லியாகவும் உள்ள பெண்கள் குறுக்கே கோடுகள் போட்ட உடைகளையோ, பெரிய டிசன்கள் உள்ள உடைகளையோ அல்லது பெரிய பார்டர்கள் போட்ட உடைகளை அணிந்ததால் பார்க்க அழகாக காட்சியளிப்பீர்கள்.
குண்டாக உள்ள பெண்கள் சிறிய டிசைன்கள் உள்ள உடைகளையும், சிறிய கோடுகள் போட்ட உடைகளையும், அகலம் குறைவாக உள்ள பார்டர்கள் போட்ட உடைகள் அணிவது அழகாகவும், ஒல்லியாகவும் தெரிவார்கள்.
சிவப்பாக இருக்கும் பெண்களுக்கு டார்க் கலரும், கருப்பாக இருக்கும் பெண்களுக்கு லைட் கலரும் பொருத்தமாக இருக்கும் என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால் அது மிகவும் தவறு. கருப்பாக இருக்கும் பெண்கள் லைட் கலர் உடை அணிந்தால், அவர்கள் மேலும் கருப்பாகத் தெரிவார்கள்.
ஆனால் சிவப்பாக இருக்கும் பெண்கள் லைட் கலர் அணிந்தால் மேலும் அழகாகத் தெரிவார்கள். கருப்பான பெண்களுக்கு ஓவர் லைட்டாகவும் இல்லாமல், ஓவர் டார்க்காவும் இல்லாமல் இருக்கும் மீடியமான கலர்கள் தான் மிகவும் சிறந்தது.
உதாரணமாக கருப்பான பெண்கள் புளூ கலர் உடைகளை அணிந்தால் பார்க்க மிகவும் அழகாகவும், கலராகவும் தெரிவார்கள்.