சென்னை: சருமம் அழகாக தோன்ற உங்களுக்கு ப்ரூட்ஸ் ஸ்கர்ப் உபயோகமாக இருக்கும்.
மாம்பழ ஸ்கரப்: மாம்பழத்தின் காம்பு பகுதியை நீக்கி விடுங்கள். மாம்பழத் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள். ஒரு பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் மாம்பழ ப்யூரி, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளை சர்க்கரை, அரை டீஸ்பூன் பால் இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை நன்றாக கழுவிய பிறகு, ஈரத்தைத் துடைத்த பின் இதை முகத்தில் பூசி, தேய்க்கவும். கழுத்து, உதடு, கை, கால்களில் கூட ஸ்கரப் செய்யலாம்.
குளிப்பதற்கு முன், உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம். இந்த மாம்பழ ஸ்கரப்பை வாரத்தில் இருநாள் பயன்படுத்தி குளிக்கலாம். ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
ஆரஞ்சு ஸ்கரப்: பாதி ஆரஞ்சு பழச்சாறை எடுத்துக் கொள்ளுங்கள். விதைகளை நீக்கிவிடுங்கள். 4 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து ஸ்கரப் தயாரிக்கவும். வாரத்தில் 3 நாட்கள், இதை வைத்து ஸ்கரப் செய்யலாம்.
இந்த முறைகளை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது, பளப்பளப்பான சருமம் கிடைக்கும். தோலுக்கு தேவையான சத்துகள் சேரும். சீரான, அழகான சருமமாக மாறும். முகப்பொலிவு கூடும். பருக்கள் வராது.