சமச்சீரான உணவுக்கட்டுப்பாட்டில் பழங்கள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரித்து, உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. மேலும், நார்ச்சத்து மற்றும் இயற்கை நொதிகள் நிறைந்துள்ளதால் தொப்பை கொழுப்பைக் குறைக்கவும் பழங்கள் உதவுகின்றன.
பழங்களை ஜூஸாக இல்லாமல் நேரடியாக மென்று சாப்பிடுவது அதிக நன்மை தரும். வெறும் வயிற்றிலும் சாப்பிடலாம், ஆனால் நீரிழிவு நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது தொப்பையை குறைக்க உதவும் 10 சிறந்த பழங்களைப் பார்ப்போம்.

பெர்ரி (Berries): ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவை கலோரி குறைவாகவும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகமாகவும் உள்ளன. வளர்சிதை மாற்றத்தையும் தொப்பை எரிப்பதையும் உதவுகின்றன.
திராட்சை (Grapes): இன்சுலின் அளவைக் குறைத்து எடை இழப்பை ஊக்குவிக்கின்றன.
அன்னாசி (Pineapple): ப்ரோமெலைன் எனும் நொதி செரிமானத்தையும் வீக்கத்தையும் குறைக்கிறது. நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம்.
தர்பூசணி (Watermelon): குறைந்த கலோரியுடன் நீர்ச்சத்து அதிகம். உடலை நீரேற்றமாக வைத்துக்கொண்டு எடை குறைக்க உதவும்.
அவகேடோ (Avocado): ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. பசியைக் கட்டுப்படுத்தி எடை குறைக்க உதவுகிறது.
கிவி (Kiwi): வைட்டமின் C மற்றும் நார்ச்சத்து அதிகம். செரிமானத்துக்கும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டுக்கும் உதவுகிறது.
ஆப்பிள் (Apple): நார்ச்சத்து மற்றும் நீர் நிறைந்ததால் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. எடை குறைக்க சிறந்தது.
பேரிக்காய் (Pear): அதிக நார்ச்சத்து, குறைந்த கலோரி கொண்டதால் எடை இழப்புக்கு உதவுகிறது.
ஆரஞ்சு (Orange): வைட்டமின் C நிறைந்தது. பசியைக் குறைத்து எடை குறைப்பை வேகப்படுத்துகிறது.
பப்பாளி (Papaya): செரிமானத்துக்கு உதவும் நொதிகள் நிறைந்தது. வீக்கம் குறைத்து எடை குறைக்க உதவுகிறது.
பிளம்ஸ் (Plums): கலோரி குறைவாகவும் நீர்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். பசியைக் கட்டுப்படுத்தும்.
எலுமிச்சை (Lemon): வளர்சிதை மாற்றத்தையும் நச்சு நீக்கத்தையும் அதிகரிக்கிறது. தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
இந்தப் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் எடையை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மேற்கொள்ளலாம்.