இன்றைய காலத்தில் பலர் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறார்கள். சிலர் விரைவான குறுக்குவழிகள் அல்லது கடுமையான உடற்பயிற்சிகளை முயற்சிக்கிறார்கள். ஆனால் அவை நீண்ட காலத்தில் பலன் தருவதில்லை. இந்நிலையில், ஜிம் போகாமல், கடுமையான டயட் பின்பற்றாமல், வெறும் பழக்கவழக்க மாற்றங்களின் மூலம் ஒரு இளைஞன் 6 மாதங்களில் 37 கிலோ எடையை குறைத்துள்ளார்.

அந்த இளைஞன் முன்பு 112 கிலோ எடை கொண்டிருந்தார். ஜன்க் ஃபுட், பொரித்த உணவு, குளிர்பானங்கள் ஆகியவற்றை அதிகமாக உண்டுவந்தார். உடற்பயிற்சி செய்யாததால் உடல் பருமன் அதிகரித்து, தினசரி செயல்களில் சிரமம் ஏற்பட்டது. இறுதியில் இந்த வாழ்க்கை முறை அவரது உடல்நலத்திற்கு ஆபத்தானது என்பதை உணர்ந்து, தன்னைத்தான் மாற்றிக் கொள்ள முடிவு செய்தார்.
அவர் சீரான உணவுமுறையைக் கடைப்பிடித்து, காய்கறி, பழங்கள், லீன் புரோடீன், அதிக தண்ணீர் போன்றவற்றை எடுத்துக் கொண்டார். உணவில் எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை தவிர்த்து, அளவோடு சாப்பிடத் தொடங்கினார். தினசரி நடைப்பயிற்சியையும் பழக்கமாக்கினார். சில மாதங்களுக்குப் பிறகு உடல் சுறுசுறுப்பாக மாறியதும், தசைகள் வளர்த்துக்கொள்ள ஜிம் செல்லத் தொடங்கினார்.
வெறும் 155 நாட்களில், அவர் 112 கிலோவில் இருந்து 75 கிலோவாக குறைந்தார். இதற்கான ரகசியம் எளிமையானது – ஆரோக்கியமான உணவு, ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு மற்றும் கடின உழைப்பு. சரியான நேரம் என்பதில்லை, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து தொடங்குவது முக்கியம் என்று அவர் கூறுகிறார். அவரது பயணம் பலருக்கும் ஊக்கமாக மாறியுள்ளது.