வீட்டிலேயே தக்காளி வளர்க்க வேண்டும் என்றால், விலையுயர்ந்த தொட்டிகள் அல்லது பெரிய தோட்டம் அவசியமில்லை. உங்கள் வீட்டில் கிடைக்கும் பிளாஸ்டிக் பாட்டிலைப் பயன்படுத்தி சுலபமாக தக்காளி செடியை வளர்க்கலாம்.
முதலில் ஒரு பெரிய பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து, அதன் அடிப்பகுதியில் சிறிய துளைகள் பண்ண வேண்டும். இதனால் தண்ணீர் வடிகட்டும் வசதி கிடைக்கும். பாட்டிலின் பாதியை வெட்டி, அதில் நல்ல தரமான மண், கரைசல் உரம், தேங்காய் நார் கலந்த கலவை வைத்து தயாராக்குங்கள்.

பின்னர் தக்காளி விதைகள் அல்லது சிறிய நாற்றுகளை அந்த மண்ணில் நட்டு வையுங்கள். தினமும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். நேரடி வெயிலில் 5–6 மணி நேரம் வைக்கும்போது செடி நன்றாக வளரும்.
சில வாரங்களில் தக்காளி செடிகள் பூக்கும், அதன் பின் சிறிய தக்காளிகள் உருவாகத் தொடங்கும். பிளாஸ்டிக் பாட்டிலில் வளர்த்தாலும் சுவை குறையாது. உங்கள் வீட்டிலேயே பசுமையாகவும் சுத்தமாகவும் தக்காளி கிடைக்கும்.
இதுபோன்ற முறைகள் நகர வீடுகளில் இடம் குறைவாக உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.