சென்னை : குதிகால் வலியை குறைக்கும் அற்புத இலைபற்றி தெரிந்து கொள்ளுங்கள். மிகவும் எளிமையாக குதிகால் வலியை இந்த இலையை வைத்து போக்கிவிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓமவல்லி இலை குதிகால் வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. 4 ஓமவல்லி இலைகளை எடுத்து நன்கு கழுவி, சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
அதனுடன் சிறிது மஞ்சள் தூள், தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதை இரவு தூங்குவதற்கு முன் குதிகாலில் வலி இருக்கும் இடத்தில் தடவவும். தொடர்ந்து 3 நாட்கள் இதை செய்து வந்தால் பலன் கிடைக்கும். இதில் உள்ள வலி நிவாரணி பண்புகள் குதிகால் வலியை குறைக்கும்.