ஹெல்த்லைன் வலைத்தளத்தின்படி, உடலில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்த முட்டை மற்றும் அதன் மஞ்சள் கருவைச் சாப்பிடலாம். முட்டைகளை சாப்பிடுவது உடலில் HDL (உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம்) அளவை அதிகரிக்கிறது, இது ஒரு வகையான “நல்ல” கொலஸ்ட்ரால். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் மற்றும் மெடிசன் டாக்டர் பிரியங்கா செஹ்ராவத், மஞ்சள் கரு மற்றும் முட்டையின் ஆரோக்கிய நன்மைகளைப் பட்டியலிட்டபடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
முட்டையின் மஞ்சள் கரு உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதாக நம்புகிறார்கள், எனவே அதை பலரும் தவிர்க்கின்றனர். ஆனால் அது முற்றிலும் கட்டுக்கதை என அந்த வீடியோவில் கூறுகிறார். மேலும் அவரது கூற்றுப்படி, முட்டையின் வெள்ளைக்கருவில் புரதங்கள், செலினியம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. அதே சமயம், மஞ்சள் கருவில் பல்வேறு வகையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன, அவை நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் ஒமேகா 3 போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளன.
மேலும் ஒமேகா 3 என்பது ஒரு வகை கொழுப்பு அமிலமாகும், இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சுறுக்கமாக அவர் சொல்ல வந்த விஷயம் என்னவென்றால் “முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள புரதம் அதிலுள்ள கொழுப்புச்சத்தை காட்டிலும் அதிகமுள்ளது” எனக் கூறினார்.மேலும் டாக்டர் பிரியங்கா கூறியதாவது, “முழுமுட்டையை சாப்பிடுவதால் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சீரான அளவில் கிடைக்கும்.” மேலும், ஒரு முட்டையை உட்கொள்ள சிறந்த நேரம் காலை உணவாகும், அதே நேரத்தில் தினமும் ஒன்று முதல் இரண்டு முட்டைகளை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. ஹெல்த்லைன் இணையதளத்தின் கூற்றுப்படி, ஒரு முட்டையில் கோலின் என்ற சத்து உள்ளது, இது பலருக்குத் தெரியாது.
கொடுக்கப்பட்ட தகவல்களின்படி, இது உயிரணு சவ்வு உருவாக்கத்தில் தேவைப்படுகிறது மற்றும் மூளையில் சமிக்ஞை மூலக்கூறுகளை உருவாக்க உதவுகிறது. ஒரு முட்டையில் இந்த சத்து சுமார் 100 கிராம் உள்ளது.