சென்னை: பொதுவாக நாம் முதுமையை தடுக்க முடியாது .ஆனால் ஒத்தி வைக்க முடியும் ,அதற்கு ஆரோக்கியமான உணவும் ,உடற் பயிற்ச்சியும் உதவும் .இந்த என்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள் பற்றி இங்கே பார்ப்போம்.
முருங்கைக்கீரை மட்டுமல்லாமல் தினமும் ஒரு கீரை உணவு, முருங்கைக்காய் போன்றவற்றை உண்பது நல்லது. குறிப்பாக நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகளை உண்பது நல்லது. இவை தவிர பைக் ஓட்டுவதற்குப் பதில் சைக்கிளிங், வாக்கிங், நீச்சல், மூச்சுப்பயிற்சி செய்வது இளமை காக்க உதவும்.
என்றும் இளமையாக இருக்க முட்டை உதவும் -இதில் புரோலின், லைசின், அமினோ அமிலங்கள் உள்ளன. இளமையாக இருக்க மட்டன்/சிக்கனின் எலும்பு சூப் உதவும். மீன் உதவும் .குறிப்பாக சாலமன், மாக்கேரல், டூனா மீன்கள்-ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்தது.
எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் உதவும். ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, பிளாக் பெர்ரி போன்ற பெர்ரி வகைகள் உதவும். கீரை, கொத்தமல்லி உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகள் உதவும். குடைமிளகாய் உதவும் -இது வைட்டமின் சி நிறைந்தது. அவகோடா பழங்கள் உதவும் – இதில் வைட்டமின் இ, வைட்டமின்சி உள்ளது. பாதாம், வால்நட் உள்ளிட்ட நட்ஸ் மற்றம் சியா, பிளக்ஸ் விதைகள் உதவும் .
பாதாம், வால்நட் உள்ளிட்ட நட்ஸ் மற்றம் சியா, பிளக்ஸ் விதைகள் உதவும் . சோயா நிறைந்த உணவு வகைகள் உதவும்