
சிறுநீரகங்கள் உடலின் கழிவு நீக்க முறையில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இது இரத்தத்தில் இருந்து நச்சுகளை வடிகட்டுவதோடு, நீர், உப்பு மற்றும் தாதுக்களின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இந்த சமநிலை பாதிக்கப்பட்டால், உடலின் பல பகுதிகள் செயலிழக்கத் தொடங்கும்.
சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் சில முன்னமே தோன்றலாம். சிறுநீரின் நிறம், அளவு மற்றும் நிலைத்தன்மையில் மாற்றம் காணப்பட்டால் கவனம் செலுத்த வேண்டும். கண்கள், கால்கள் மற்றும் கைகளில் வீக்கம் ஏற்பட்டால், அது சிறுநீரக செயல்பாட்டின் குறைபாட்டை குறைக்கலாம்.

உடல் அதிகமாக சோர்வடைதல் மற்றும் பலவீனம் உணர்தல் ஒரு முக்கிய அறிகுறியாகும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படாவிட்டால், சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படலாம். சிறுநீரில் நுரை அல்லது இரத்தம் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
பசியின்மை மற்றும் குமட்டல் உணர்வும் இதன் முக்கிய அறிகுறிகளாகும். உடலில் அதிகப்படியான திரவம் சேரும்போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். சிறுநீரக செயலிழப்பு காரணமாக இரவில் தூங்க முடியாத பிரச்சனையும் ஏற்படலாம். இந்த அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தொடக்க நிலையிலேயே இந்த பிரச்சனையை கண்டறிந்து சிகிச்சை பெற்றால், பெரிய சிக்கல்களைத் தவிர்க்கலாம்.