புரதச்சத்து தேவைக்காக பலர் தினமும் சிக்கன் உட்கொள்கிறார்கள். இது நிச்சயமாக சுவையானதும், மலிவானதும் மற்றும் ஆரோக்கியமாகப் பொருளாக கருதப்படுகிறது. சிக்கனில் வைட்டமின் பி 12 மற்றும் கோலின் போன்ற நன்மைகள் உள்ளன.

அவை மூளை வளர்ச்சிக்கும், நரம்பு மண்டல செயல்பாட்டுக்கும் உதவுகின்றன. இது வயதானவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது. எனினும், சமீபத்திய ஆய்வுகள் சிக்கன் சாப்பிடுவதற்கான சில எதிர்பாராத உடல்நல பிரச்சனைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்க ஆய்வாளர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள், சிக்கன் மற்றும் பிற இறைச்சி வகைகள் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வழிகாட்டுதல்களில், வாரத்திற்கு ஒருமுறை முதல் மூன்று முறை மட்டுமே சிக்கன் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
அதனால், குறைந்த அளவில் சிக்கன் உட்கொள்வது நன்மை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆய்வுகள் கொண்டு கண்டறியப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சிக்கன் சாப்பிடுவதால் சுகாதார நன்மைகள் இருப்பினும், மிகுந்த அளவு சிக்கன் உட்கொள்ளும் பயனாளர்களுக்கு இரைப்பை குடல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கின்றது.
குறிப்பாக, வாரத்திற்கு 300 கிராமுக்கு மேல் சிக்கன் சாப்பிடும் நபர்களுக்கு இரப்பை குடல் புற்றுநோய் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகள் அதிகமாக எதிர்கொள்கின்றன.எனவே, சிக்கன் சாப்பிடும்போது அளவு மிகுதியாக இருக்கக்கூடாது. சிறிய அளவில் சிக்கன் உட்கொள்ளல் ஆரோக்கியமான மாற்றமாக இருக்கும்.