முடி வறட்சி, உதிர்வு, மற்றும் பொடுகு தொல்லைகளை ஆளி விதைகள் கொண்டு தீர்க்கலாம். வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய ஹேர்பேக் மூலம் உங்கள் முடியை சில்கி மற்றும் ஸ்மூத்தாக மாற்ற முடியும்.
தேவையான பொருட்கள்
- ஆளி விதைகள் – 4 ஸ்பூன்
- தண்ணீர் – அரை கிளாஸ்
- கேஸ்டர் ஆயில் – 1 ஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் ஆளி விதைகளைக் கொண்டு அரை கிளாஸ் தண்ணீரில் கொதிக்க விடுங்கள்.
- கொதிக்கும் போது, ஆளி விதைகளில் இருந்து ஜெல் வெளியேறும்.
- ஜெல்லை வடிகட்டி, தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
- அதில் கேஸ்டர் ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பயன்படுத்தும் முறை
- தயாரித்த ஜெல்லை முடி மற்றும் தலைத் தோலில் மிருதுவாக தேய்க்கவும்.
- 30 நிமிடங்கள் கழித்து நல்ல தண்ணீரால் குளிக்கவும்.
பயன்கள்:
- வறட்சி நீங்கி முடி மிருதுவாக மாறும்.
- முடி உதிர்வும் பொடுகும் குறையும்.
இந்த ஹேர்பேக் பயன்படுத்தும் முன், மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனையை பெறுங்கள்.