நேஷனல் சானிடேஷன் ஃபவுண்டேஷன் வெளியிட்ட ஆய்வில், பிளாஸ்டிக் டப்பாக்களில் நீண்டகாலம் சேமித்து வைக்கப்படும் உணவுகள் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிப்பதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அசிடிக் தன்மை கொண்ட உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள், பிளாஸ்டிக் கெமிக்கலுடன் வினைபுரிந்து நச்சு தன்மையை ஏற்படுத்துகின்றன. இதனால் உணவின் சுவையும், அதன் ஊட்டச்சத்தும் பாதிக்கப்படுவதோடு, உடல்நலத்துக்கும் ஆபத்து ஏற்படலாம்.
சூடான உணவுகளை பிளாஸ்டிக் டப்பாக்களில் வைப்பது மிகவும் அபாயகரமானதாகும். சூடின் காரணமாக பிளாஸ்டிக்கில் இருந்து கெமிக்கல்கள் வெளியேறி உணவுடன் கலக்க வாய்ப்புள்ளது. அதேபோல், சமைக்காத இறைச்சி மற்றும் கடல் உணவுகளை பிளாஸ்டிக்கில் வைத்தால் பாக்டீரியா அதிகரித்து, அது ஃபிரிட்ஜில் உள்ள பிற உணவுகளையும் பாதிக்கக்கூடும். எனவே, இவ்வகை உணவுகளை கண்ணாடி அல்லது ஸ்டீல் பாத்திரங்களில் சேமிப்பது நிபுணர்கள் பரிந்துரைக்கும் பாதுகாப்பான வழிமுறையாகும்.

தக்காளி, எலுமிச்சை, ஆரஞ்சு, பெர்ரி போன்ற அசிடிக் பழங்கள், பிளாஸ்டிக் கெமிக்கலுடன் எளிதில் வினைபுரிந்து தீங்கு விளைவிக்கக்கூடியவை. அதுபோல சீஸ், வெண்ணெய், எண்ணெய் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளும் பிளாஸ்டிக்கில் வைக்கக் கூடாது. மேலும், கிம்சி, ஊறுகாய், சோடா போன்ற கார்பனேட்டட் உணவுகள் பிளாஸ்டிக் டப்பாக்களை கசிவதற்கும் உடைவதற்கும் காரணமாகின்றன. இதனால் உணவு வீணாகி, அதன் தரமும் சுவையும் கெட்டுவிடும் அபாயம் உள்ளது.
மாற்று வழியாக கண்ணாடி, ஸ்டீல் அல்லது செராமிக் டப்பாக்களை பயன்படுத்துவது உணவுகளை பாதுகாப்பாகவும் நீண்ட காலம் சுவையுடனும் வைக்க உதவும். இவை கெமிக்கல் அற்றவை என்பதால் உடல்நலத்திற்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே, பிளாஸ்டிக் டப்பாக்களை பயன்படுத்துவதை குறைத்து, ஆரோக்கியத்தை பாதுகாப்பது அனைவரின் கடமையாகும்.